உச்ச நீதிமன்றம் அதிரடி... செந்தில் பாலாஜியின் லேட்டஸ்ட் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு!

உச்ச நீதிமன்றம் அதிரடி... செந்தில் பாலாஜியின் லேட்டஸ்ட் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு!

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான வீசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜியின் சமீபத்திய மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை கடந்த அக்டோபர் 19ம் தேதி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கு நீதிபதிகள் பீலா எம்.திரிவேதி, எஸ்சி சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகில் ரோத்தகியிடம், செந்தில் பாலாஜியின் சமீபத்திய மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தி, இந்த வழக்கை வரும் 28ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

முன்னதாக முகில் ரோத்தகி வாதிடுகையில், “பல்வேறு உடல் உபாதைகளால் செந்தில் பாலாஜி அவதியுற்று வருகிறார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் அவருக்கு ஸ்ட்ரோக் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக மூளை எம்ஆர்ஐ ஸ்கேன் ரிப்போர்ட் தெரிவிக்கிறது” என்றார்.

அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இது மிகவும் பழைய பிரச்சினை. சென்னை உயர் நீதிமன்றம் இவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தபோது, ‘ஜாமீனில் வெளிவந்தால் மட்டுமே சிகிச்சை அளிக்கக்கூடிய அளவுக்கு செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கை இல்லை’ என குறிப்பிட்டது.

இது தவிர இலாகா இல்லாத அமைச்சராக அவர் தொடர்வது, அவரது சகோதரர் தலைமறைவு, கரூரில் சோதனைக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது போன்ற காரணங்களை பார்க்கும்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வழக்கின் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடும்” என சென்னை உயர் நீதிமன்றம் முன்னமே குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், செந்தில் பாலாஜியின் லேட்டஸ்ட் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in