`மக்களின் இதயங்களை வென்றுவிட்டார் மோடி'

பாஜகவை வாழ்த்தும் ஓபிஎஸ்
`மக்களின் இதயங்களை வென்றுவிட்டார் மோடி'

நான்கு மாநிலங்களில் ஆட்சியமைக்கவுள்ள பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூரில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறது. கோவாவில் 40 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் இருக்கிறது. அங்கு பாஜக ஆட்சியமைக்க இன்னும் ஒரு இடம் வேண்டும். காங்கிரஸ், திரிணமூல், ஆம் ஆத்மி தவிர்த்து 5 இடங்களில் பிற கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இதில் ஒருவரின் ஆதரவை பெற்று பாஜக ஆட்சியமைக்க உள்ளது.

இந்நிலையில் நான்கு மாநிலங்களில் ஆட்சியமைக்கவுள்ள பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், 'அன்புள்ள பிரதமர், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று மக்களின் இதயங்களை வென்றதற்கு உங்களை வாழ்த்துகிறேன்.

உங்கள் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் பாரதிய ஜனதா கட்சியின் நல்லாட்சி மற்றும் நலத்திட்டங்களுக்கு தீர்ப்பு வருகிறது. இது வளர்ச்சிக்கான ஆணையாகும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்" என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in