மூன்றாவது முறையும் மோடி ஜெயிப்பாரா? வெளியானது தேர்தல் கருத்துக்கணிப்பு!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

டைம்ஸ் நவ் இடிஜி நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பின்படி இன்று தேர்தல் நடந்தால், நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேருவுக்குப் பிறகு தொடர்ந்து 3வது முறையாக இந்தியாவின் ஆட்சியைப் பிடிக்கும் முதல் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுவார் என்று டைம்ஸ் நவ் இடிஜி நடத்திய சர்வே தெரிவித்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, பாரதிய ஜனதா கட்சி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியா கூட்டணி எனப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டணி 160 முதல் 190 இடங்களை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 296 முதல் 326 இடங்களைப் பெறக்கூடும் என்று கணக்கெடுப்பின் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மோடி நிர்வாகத்திற்கு சவால் விடுக்கும் நோக்கில், இந்தியா கூட்டணி என்ற பெயரில் எதிர்க் கட்சிகள் ஒருங்கிணைந்தபோதிலும், அதனால் பாஜக அரசாங்கத்தை பதவியிலிருந்து அகற்ற முடியாது என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

இந்த கருத்துக்கணிப்பின்படி இந்தி பேசும் வட மாநிலங்களில் பாஜக கூட்டணி வலுவுடன் உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட முக்கிய மாநிலங்களில் பாஜக குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பதிவு செய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பாஜக காங்கிரஸ்
பாஜக காங்கிரஸ்

உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் பாஜக கூட்டணி 51.20 சதவீத வாக்குகளுடன் 69 - 73 தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 38.20 சதவீத வாக்குகளுடன் 3 -7 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் 0 - 10 தொகுதிகளில் வெற்றிபெறும் கணிக்கப்பட்டுள்ளது. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி 22-24 இடங்களைக் கைப்பற்றும் என்றும், இந்தியா கூட்டணி 16-18 இடங்களில் வெற்றிபெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in