அரசியல் சாசனத்தை மாற்றவே 400 இடங்களில் வெற்றிபெற நினைக்கிறார் மோடி... ராகுல் காந்தி கோபம்!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி
Updated on
2 min read

வெற்றி பெற்றால் அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என பாஜக தலைவர்கள் அறிவித்துள்ளனர். அதனால்தான் 400 இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்ற முழக்கத்தைக் கொடுத்தார்கள் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லமில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசிய ராகுல் காந்தி, “அரசியல் சாசனத்தைக் காப்பாற்றவே இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது. பாஜகவும் ஆர்எஸ்எஸ்ஸும் அரசியல் சாசனத்தை முடிக்க விரும்புகின்றன. காங்கிரஸும் இந்தியா கூட்டணியும் இதைக் காப்பாற்ற முயற்சிக்கின்றன. இந்த அரசியலமைப்பு உங்களுக்கு ஜல் (நீர்), ஜங்கல் (காடு), ஜமீன் (நிலம்) உரிமைகளை வழங்கியுள்ளது. ஆனால் அவற்றை அகற்றவே முழு அதிகாரம் வேண்டும் என நரேந்திர மோடி விரும்புகிறார்" என்று அவர் கூறினார்.

மோடி
மோடி

மேலும், “வெற்றி பெற்றால் அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என பாஜக தலைவர்கள் அறிவித்துள்ளனர். அதனால்தான் 400 இடங்கள் என்ற முழக்கத்தைக் கொடுத்தார்கள். ஆனால் 400ஐ மறந்து விடுங்கள், அவர்களுக்கு 150 இடங்கள் கூட கிடைக்காது. அவர்கள் இடஒதுக்கீட்டை நீக்குவதாகச் சொல்கிறார்கள். இந்த நிலையில் இருந்து சொல்ல விரும்புகிறேன். 50 சதவீத வரம்பைத் தாண்டி இடஒதுக்கீட்டை அதிகரிப்போம். ஏழைகள், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எவ்வளவு இடஒதுக்கீடு தேவையோ, அவ்வளவு இடஒதுக்கீடு வழங்குவோம்

ஆதிவாசிகளின் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள், உங்கள் நிலம் பறிக்கப்படுகிறது, ஆனால் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதில்லை. காரணம் இருக்கிறது. இந்த ஊடக நிறுவனங்களில் ஆதிவாசிகள் இல்லை.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

90 அதிகாரிகள் நாட்டின் அரசாங்கத்தை நடத்துகிறார்கள். அவர்கள்தான் வரவு செலவுத் திட்டங்களை விநியோகிக்கிறார்கள். அந்த 90 பேரில் ஒருவர் மட்டுமே ஆதிவாசி சமூகத்தை சேர்ந்தவர், மூன்று பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மூன்று பேர் மட்டுமே பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதேபோல பழங்குடியின மக்கள் ஊடகங்களிலும், கார்ப்பரேட் உலகிலும் இல்லை. இதை நாங்கள் மாற்ற விரும்புகிறோம். அதனால்தான் நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பொருளாதார கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளோம்” என்று ராகுல் காந்தி கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

பிளஸ் டூ மாணவர்களே... மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

வாயில் மலத்தை வைத்துக் கொண்டு பேசாதீர்கள்... வைரமுத்துவுக்கு கண்ணதாசன் மகன் எச்சரிக்கை!

குமரியில் பெரும் சோகம்... கடலில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் பலி!

வெட்டிப்போட்ட சாதி; கைதூக்கி விட்ட கல்வி... சாதித்துக் காட்டிய நாங்குநேரி மாணவர் சின்னதுரை!

பகீர்... முதலைகள் உள்ள கால்வாயில் 6 வயது மகனை வீசிய பெற்றோர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in