பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

'ஊழலே, வாரிசு அரசியலே வெளியேறு'.... மோடி போட்ட பரபரப்பு ட்விட்!

வெள்ளையனே வெளியேறு தினத்தில் ஊழலே வெளியேறு என பிரதமர் நரேந்திர மோடி ட்விட் வெளியிட்டுள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக1942-ம் ஆண்டு மகாத்மா காந்தி தொடங்கிய வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி எதிர்கட்சிகளைத் தாக்கி ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ’’வெள்ளையனே வெளியேறு இயக்க தினம் அனுசரிக்கப்படும் நாளில், நாட்டின் சுதந்திரத்துக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்.

மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ், காலனித்துவம் முடிவுக்கு வர வெள்ளையனே வெளியேறு இயக்கம் முக்கிய பங்காற்றியது. இன்று இந்தியா ஒரே வார்த்தையைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறது. அது ஊழலே வெளியேறு. வாரிசு அரசியலே வெளியேறு. தங்கள் நலனுக்காக சமாதானம் செய்து கொள்ளும் முடிவே வெளியேறு என்பதுதான்’’ என்று பதிவிட்டுள்ளார்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in