2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடியே பிரதமர் வேட்பாளர்: ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு!

2024 நாடாளுமன்ற தேர்தலில் மோடியே பிரதமர் வேட்பாளர்: ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு!

2024 நாடாளுமன்ற தேர்தல் வரை ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த ஜனவரி 10-ம் தேதி பாஜக பொதுச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் 2 நாட்கள் நடைபெறுகிறது. பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தின் முதல் நாளில் அனைத்து மாநில செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 2-வது நாளாக இக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், எதிர்வரும் 9 சட்டமன்ற தேர்தல்கள், 2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், ஜே.பி.நட்டாவின் பதவி காலம் வரும் 20-ம் தேதி முடிவடையும் நிலையில் அது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இந்த நிலையில், பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், மோடி - ஜே.பி.நட்டா தலைமையின் கீழ் 2024 நாடாளுமன்ற தேர்தலின் மேலும் அதிக மெஜாரிட்டி பாஜகவுக்கு கிடைக்கும் எனவும், மீண்டும் மோடியே பிரதமராக பதவியேற்று நாட்டை வழிநடத்துவார் எனவும் அமித் ஷா கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in