ஜிஎஸ்டிக்கு முதல் எதிரி மோடி தான்! - அமைச்சர் சொன்ன தகவல்

ஜிஎஸ்டிக்கு முதல் எதிரி மோடி தான்! - அமைச்சர் சொன்ன தகவல்

ஜிஎஸ்டிக்கு முதல் எதிரியாக இருந்தவர் இன்றைய பிரதமர் மோடி தான் என்று தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகளின் மீது இன்று விவாதம் நடைபெற்றது. அப்போது ஜிஎஸ்டி குறித்த கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதன் பின் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்," அரசியல் என்று பார்த்தால் ஜிஎஸ்டிக்கு முதல் எதிரியாக இருந்தவர் இன்றைய பிரதமர் மோடி தான். இந்த வரி கொண்டுவரப்பட்டபோது இரண்டு குறைகள் இருந்தன. முதல் குறை மாநிலங்களில் இருந்து பெறப்படும் வரிக்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுவது, இரண்டாவது குறை ஜிஎஸ்டி வரியை அவரச அவரசமாக செயல்படுத்துவதால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது குறித்த அச்சம் இருந்தது" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்," ஜிஎஸ்டி வரி அமலாகி 5 ஆண்டுகளுக்குப் பிறகும் எதிர்பார்க்கப்பட்ட வரியும், வளர்ச்சியும் வரவில்லை. அந்த வரியை ஒருமைபடுத்தியதால் வரக்கூடிய வரியும் வரவில்லை. மாநிலங்கள் எல்லாம் தனித்தனி விற்பனை வரி இருந்தபோது அதிக வரியை பெற்று வந்தது. ஒரே நாடு, ஒரே வரியை கொண்டு வந்தபோது, மாநிலங்களிடையே 11. 4 சதவீதமாக குறைந்துள்ளது. அதேபோல், ஜிஎஸ்டி உருவானபோது மத்திய அரசு, முந்தைய ஆண்டுக்கு இந்த ஆண்டு போதிய வருமானம் வரவில்லை என்றால் ஜிஎஸ்டி செஸ் என்ற முறையில் தீட்டி அதில் வரும் நிதியை வைத்து சமம் செய்யப்படும் என்று தெரிவித்தது. ஆனால், அது சில மாநிலங்களில் சில ஆண்டுகளில் தேவை இல்லாமல் போனது" என்று கூறினார்.

"ஒரு சில மாநிலங்களில் இந்த ஜிஎஸ்டி செஸ் 2, 3 ஆண்டுகளில் தேவையானதாக மாறிவிட்டது. எப்போது, மாநிலங்கள் கட்டுப்பாட்டில் இருந்ததோ (குறிப்பாக 2004 முதல் 2016) வரையில் விற்பனை வரி 16 சதவீதம் வரை வளர்ந்தது. ஜிஎஸ்டி வந்ததற்குப் பிறகு இது முற்றிலும் வளரவில்லை. தொடர்ந்து அனைத்து மாநிலங்களும், ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினர்களும் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதில், இழப்பீடு 5 வருடங்கள் இல்லாமல் அதற்கு மேல் இருக்க வேண்டும் என்றும், ஜிஎஸ்டி குறித்து ஒரு கமிட்டி உருவாக்கி 6 மாதத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால், 10 மாதங்கள் ஆகியும் இன்னும் ஒரு கூட்டம் கூட கூடவில்லை" என்றார் பழனிவேல் தியாகராஜன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in