“மோடி அரசை வங்கக்கடலில் தூக்கி எறிய வேண்டும்” -தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்Hindu கோப்பு படம்

“அதிகாரத்தில் இருந்து மோடி தலைமையிலான பாஜக அரசு அகற்றப்பட்டு, வங்கக்கடலில் தூக்கி எறிய வேண்டும். அமைதியாக உட்கார்த்து கொண்டு இருக்க மாட்டோம்” என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் காட்டமாக கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மத்திய அரசு அதிகாரத்தில் இருந்து பாஜக அகற்றப்பட்டு, வங்கக்கடலில் வீசபட வேண்டும். நாட்டுக்கு நல்லது செய்வது குறித்து முடிவு எடுக்க வேண்டிய நேரம் இது. வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருக்க முடியாது. நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டுமானால் பாஜகவை தூக்கி வீச வேண்டும். பிரதமர் மோடி மிகவும் குறுகிய எண்ணம் கொண்டவராக உள்ளார்.

மத்திய அரசின் பட்ஜெட் ஒரு கோல்மால் பட்ஜெட். அதில் நாட்டின் முன்னேற்றத்துக்கான எந்த உருப்படியான திட்டமும் இல்லை. தொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட அனைத்துத் தரப்பினரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முன்னேற்றத்துக்கான எந்த அம்சமும் பட்ஜெட்டில் இல்லை. பாஜக, காங்கிரஸ் இரு தேசிய கட்சிகளும் நாட்டின் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தவறிவிட்டன. நாட்டின் முன்னேற்றத்துக்காக தாம் பல்வேறு தலைவர்களுடன் பேசி இருக்கிறேன். விரைவில் அதற்கான திட்டத்தை வெளியிட இருக்கிறேன்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in