தமிழக உள்ளாட்சித் தேர்தல்: பாஜக வெற்றியாளர்களுக்கு மோடி வாழ்த்து!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தமிழகத்தில் நடந்து முடிந்த 9 மாவட்டங்களின் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினருக்கு, பிரதமர் மோடி இன்று(அக்.20) காலை வாழ்த்து தெரிவித்தார்.

உள்ளாட்சியில் வென்ற பாஜக வெற்றியாளர்களுடனான சந்திப்பு மற்றும் புகைப்படங்களை, கட்சியின் தமிழக தலைவர் கே.அண்ணாமலை அண்மையில்(அக்.18) ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதை ரீட்விட் செய்த மோடி, கட்சியின் வெற்றியாளர்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

’தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி’ என்ற பதிவின் இறுதியில், ’அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம்’ என்றும் மோடி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

மோடியின் இந்த ட்விட்டர் தமிழ் பதிவை, தமிழக பாஜகவினர் உற்சாகமாகப் பகிர்ந்தும், பதில் வினையாற்றியும் வருகின்றனர்.

முன்னதாக, இதே வாழ்த்துச் செய்தியை நேற்றிரவு ஆங்கிலத்தில் பிரதமர் மோடி பகிர்ந்திருந்தார். காலையில் மற்றுமொரு வாழ்த்துப் பதிவாக அதையே தமிழில் தந்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in