கர்நாடகாவில் மோடியால் மேஜிக் செய்ய முடியாது; சிவக்குமாருடன் சண்டையா? - சித்தராமையா பரபரப்பு பேட்டி

சித்தராமையா
சித்தராமையாகர்நாடகாவில் மோடியால் மேஜிக் செய்ய முடியாது; சிவக்குமாருடன் சண்டையா? - மனம் திறக்கும் சித்தராமையா

பிரதமர் நரேந்திர மோடியால் கர்நாடகாவில் மேஜிக் செய்ய முடியாது என காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார். பஞ்சாப், டெல்லி, மேற்கு வங்கம், சமீபமாக இமாசல பிரதேசம் போன்ற மாநிலங்களில் மோடி ஏன் மேஜிக் செய்யவில்லை என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அங்கே காங்கிரஸ் - பாஜக – மதசார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த சூழலில் பெங்களூரு இல்லத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் பேசிய முன்னாள் முதல்வர் சித்தராமையா, “டி.கே. சிவக்குமாரும், நானும் கர்நாடகாவில் முதல்வர் வேட்பாளர்கள்தான். சிவக்குமாருக்கும் எனக்கும் இடையே எந்த சண்டையும் இல்லை. யார் முதல்வர் என்பதை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களும், காங்கிரஸ் மேலிடமும் முடிவு செய்யும்.

பாஜகவின் மூத்த தலைவர்களான ஜெகதீஷ் ஷெட்டர், லக்ஷ்மண் சவாதி ஆகியோர் காங்கிரசில் இணைந்திருப்பது மாநிலத்தில் எந்த திசையில் காற்று வீசுகிறது என்பதற்கான அறிகுறியாகும். எனவே நாங்கள் சுமார் 150 இடங்களை வெல்வோம். இந்த தேர்தலில் காங்கிரஸுக்கு கணிசமான லிங்காயத்து சமூகத்தின் ஆதரவு கிடைக்கும். பாஜக வெறுப்பு அரசியல் செய்கிறார்கள். அவர்கள் ஏன் ஹலால், அஸான் மற்றும் ஹிஜாப் பிரச்சினைகளை எழுப்பினார்கள், அது பாஜகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும். கர்நாடக மக்களின் மனதில் பாஜகவின் ஊழல்கள் ஊடுருவிவிட்டதால், இந்த அரசை தூக்கி எறிய வேண்டும் என்று அவர்கள் மனதில் உறுதி பூண்டுள்ளனர். நாங்கள் அதீத நம்பிக்கையில் இல்லை. மக்களின் அடிப்படை யதார்த்தம் மற்றும் துடிப்பு எனக்குத் தெரியும். எனவே காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும்" என்று கூறினார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in