சௌரப் பரத்வாஜ், அதிஷி ஆகியோரை டெல்லியின் புதிய அமைச்சர்களாக நியமிக்க கேஜ்ரிவால் முடிவு!

சௌரப் பரத்வாஜ், அதிஷி
சௌரப் பரத்வாஜ், அதிஷிசௌரப் பரத்வாஜ், அதிஷி ஆகியோரை டெல்லியின் புதிய அமைச்சர்களாக நியமிக்க கேஜ்ரிவால் முடிவு!

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் சௌரப் பரத்வாஜ் மற்றும் அதிஷி ஆகியோரின் பெயர்களை டெல்லி கேபினட் அமைச்சர்களாக சேர்க்க பரிந்துரை செய்து, டெல்லி துணை நிலை விகே சக்சேனாவுக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் புதிதாக அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் அடுத்த 48 மணி நேரத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலின் நம்பிக்கைக்குரிய சகாக்களான மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகிய இருவரும் தனித்தனி குற்றச்சாட்டின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் இருவரும் அமைச்சரவையில் இருந்து நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த சூழலில் புதிய அமைச்சர்களை சேர்க்கும் நடவடிக்கையை டெல்லி ஆம் ஆத்மி அரசு எடுத்துள்ளது.

டெல்லியின் துணை முதலமைச்சராக இருந்த சிசோடியா நிதி, கல்வி உட்பட பல உயர்மட்ட இலாகாக்களை வகித்தார். ஜெயின் டெல்லியின் சுகாதாரம் மற்றும் சிறைத்துறை அமைச்சராக இருந்தார். அவர்கள் ராஜினாமா செய்த பிறகு, ஆம் ஆத்மி அரசுக்கு மிகப்பெரிய சவால் எழுந்தது. இந்த நிலையில் அடுத்த வார இறுதியில் நடைபெறவுள்ள டெல்லி பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக, அரசின் சுமூகமான செயல்பாட்டை உறுதி செய்வதற்காக முதல்வர் கேஜ்ரிவால் புதிய அமைச்சர்களை நியமித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in