எஸ்.பி.வேலுமணி வீடு முன் குவிந்த எம்எல்ஏக்கள், அதிமுகவினர்

காவல்துறையினருடன் வாக்குவாதத்தால் பதற்றம்
எஸ்.பி.வேலுமணியின் வீட்டு முன்பு குறித்த அதிமுகவினர்
எஸ்.பி.வேலுமணியின் வீட்டு முன்பு குறித்த அதிமுகவினர்

அதிமுக முன்னாள அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீட்டிற்குள் செல்ல முயன்ற எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவாளர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.23 கோடி சொத்துக்குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணியின் வீட்டில் இன்றும் மீண்டும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த முறை வீட்டில் இல்லாத நிலையில் இந்தமுறை அவர் வீட்டில் இருந்தார். அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எஸ்.பி.வேலுமணியின் வீட்டு முன்பு குறித்த அதிமுக பெண்கள்
எஸ்.பி.வேலுமணியின் வீட்டு முன்பு குறித்த அதிமுக பெண்கள்

இதனிடையே, தகவல் அறிந்த அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுகவினர் வேலுமணியின் வீட்டின் முன் குவிந்தனர். அப்போது, வேலுமணி மீது பொய் வழக்கு போடுவதாகக் கூறி அவர்கள் முழக்கமிட்டனர். அவர்கள் திடீரென வேலுமணியின் வீட்டிற்குள் செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்கள் காவல்துறையினருக்கு எதிராக முழக்கமிட்டனர். இதன் பின்னர் எம்எல்ஏக்களை மட்டும் வேலுமணியின் வீட்டிற்குள் காவல்துறையினர் அனுமதித்தனர். வேலுமணியின் வீட்டின் முன்பு அதிமுகவினர் குவிந்து வருவதால் அந்த பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in