மணி என்னங்க ஆச்சு?... வேட்புமனு தாக்கலின் போது டென்ஷனான பொள்ளாச்சி ஜெயராமன்!

வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த இடத்தில் ஆவேசமான எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன்
வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த இடத்தில் ஆவேசமான எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், திமுகவினரும், அதிமுகவினரும் ஒரே நேரத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமனை உளவுப் பிரிவு போலீஸார் தடுத்து நிறுத்தியதால் அவர் ஆவேசமடைந்தார்.

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் ஈஸ்வரசாமியும், அதிமுக சார்பில் கார்த்திகேயனும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இருவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்காக பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கேத்தரீன் சரண்யாவிடம் அவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி
வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி

அதிமுகவிற்கு மதியம் 12 முதல் ஒரு மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி, திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து காத்திருந்தார். அப்போது வெளியே காத்திருந்த அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், மடத்துக்குளம் மகேந்திரன், உடுமலை ராதாகிருஷ்ணன், கிணத்துக்கடவு தாமோதரன், வால்பாறை அமுல் கந்தசாமி ஆகியோர் நேரமானதால் ஆவேசம் அடைந்தனர். தேர்தல் அலுவலகத்திற்குள் வந்து நீண்ட நேரம் ஆகிவிட்டதால் உடனடியாக தங்களிடம் மனுக்களை பெற வேண்டும் என தேர்தல் நடத்தும் உதவி அலுவலரிடம் பொள்ளாச்சி ஜெயராமன் முறையிட்டார்.

எல்.எல்.ஏக்கள் புடைசூழ வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன்
எல்.எல்.ஏக்கள் புடைசூழ வேட்பு மனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன்

அப்போது உளவு பிரிவு போலீஸார் அவரை தடுத்ததால் ஆவேசமான அவர், ”யாரப்பா நீ? ஏன் தடுக்குறீங்க?” என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரது மனுக்களையும் தேர்தல் அதிகாரி பெற்றுக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்எல்ஏக்கள், விவசாயம் பிரதானமாக இருக்கும் பொள்ளாச்சியில் தென்னை விவசாயிகள் மற்றும் அது சார்ந்த தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் மக்களின் பசி அறியாத அரசுகளாக மத்திய மாநில அரசுகள் செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். ஒரே நேரத்தில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!

50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!

அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

நிலைமை மாறிடுச்சு... கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்... பகீர் கிளப்பிய முதல்வர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in