மீண்டும் திமுகவின் தலைவரானார் மு.க.ஸ்டாலின்: போட்டியின்றி தேர்வு!

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்KUMAR SS

திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவராக இரண்டாவது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வாகியுள்ளார்.

சென்னை அமைந்தகரையில் திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் தற்போது நடந்துவருகிறது. இதில் திமுகவின் தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு பெற்றுள்ளார். தலைவர் பதவிக்கு வேறு யாரும் போட்டியிட மனு செய்யாத நிலையில் தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவில் அவர் மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதேபோல் திமுகவின் பொதுச் செயலாளராக இரண்டாவது முறையாகத் துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரது வேட்புமனுவை 668 பேர் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் இருந்தனர். துரைமுருகனை எதிர்த்தும் யாரும் போட்டியிட விருப்ப மனு செய்யவில்லை. எனவே, அவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல் கட்சியின் பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராகவும் யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவராக கனிமொழி தேர்வாகியுள்ளார். க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் துணைப் பொதுச்செயலாளர்களாகத் தேர்வு பெற்றுள்ளனர்.

இதேபோல் திமுகவின் முதன்மை செயலாளராக கே.என்.நேருவும், திமுக தணிக்கைக் குழு உறுப்பினர்களாக முகமது சகி, பிச்சாண்டி, வேலுச்சாமி, சரவணன் ஆகிய நான்கு பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in