மின்சார சீர்திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்: அமித் ஷாவிடம் வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலின்!

மின்சார சீர்திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்: அமித் ஷாவிடம் வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலின்!

தென் மண்டல கவுன்சில் கூட்டம் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆங்கிலத்தில் உரையாற்றினார். அவர் பேசுகையில், “இந்தியா வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்காற்றி வருகிறது. ஜிஎஸ்டி அமலாக்கத்தால் மாநிலங்களுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடு வழங்கும் காலத்தை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும். தமிழ்நாடு காற்றாலை, சூரிய ஒளி போன்ற இயற்கை சார்ந்த சக்திகளின் மூலம் மின் உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறது.

காற்றாலைகளில் ஜூன், ஜூலை மாதங்களில் மட்டுமே மின்சாரம் கிடைக்கிறது. தமிழகத்தில் தொழில் வளர்ச்சி காரணமாக மின்சாரத் தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளிலிருந்து மாநிலங்களே நேரடியாக நிலக்கரி கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். மேலும் மின்சார சீர்திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in