தமிழக தொழில்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் வைத்துள்ள இலக்கு எவ்வளவு தெரியுமா?

தமிழக தொழில்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் வைத்துள்ள இலக்கு எவ்வளவு தெரியுமா?

தொழில்துறையில் வளர்ச்சிபெற உற்பத்தி, சேவை ஆகிய இரண்டு துறைகளிலும் முன்னேற்றம் அவசியம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தரமணியில் அமைந்துள்ள டைடல் பூங்கா வளாகத்தில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் தொழில் வளர்ச்சி 4.0 என்ற மாநாட்டை தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார். முன்னதாக தமிழ்நாடு விண்வெளி பாதுகாப்பு மற்றும் தொழில் கொள்கைளை வெளியிட்டு அங்கிருக்கும் அரங்குகளைப் பார்வையிட்டார். அப்போது நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நாடு வான்வெளி மற்றும் பாதுகாப்பு கொள்கை-2022 வெளியிடுதல், மேம்பட்ட உற்பத்தி திறனுக்கான இரண்டு மையங்களை திறந்து வைத்தல், மதுரை மற்றும் சென்னையில் ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கான பயிற்சி நிறுவனங்களைத் தொடங்கி வைத்தல், பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல் உள்ளிட்டவை நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “தொழில்துறையில் இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவிலான கவனத்தையும் தமிழகம் ஈர்த்து வருகிறது. தொழில் துறையின் சார்பாக கடந்த 15 மாதங்களில் ஏராளமான மாநாடுகள் நடைபெற்றுள்ளன. 2030-ம் ஆண்டுக்கு ஒரு ட்ரில்லியன் அமெரிக்க பொருளாதாரத்தை அடைய வேண்டும் என்ற தமிழ்நாட்டு தொழில்துறைக்கு நான் வைத்துள்ள இலக்கு மிகப்பெரியது. பொதுவாக உற்பத்தித் துறையை விட சேவைத் துறையில் கவனம் செலுத்தினால்தான் பெரிய அளவிலான வளர்ச்சி கிடைக்கும் என சிலர் சொல்கிறார்கள். ஆனால், நம்மைப் பொறுத்தவரை இரண்டுமே முன்னிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து தரப்பினருக்குமான வளர்ச்சியை நாம் எட்ட முடியும்.” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in