திமுக தான் திருவண்ணாமலை கோயிலை மீட்டுக் கொடுத்தது : முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

திமுக தான் திருவண்ணாமலை கோயிலை மீட்டுக் கொடுத்தது : முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

தமிழக அரசின் சார்பாகத் திருவண்ணாமலையில் பல்வேறு நலத்திட்டங்களைத் துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாற்றினார்.

திருவண்ணாமலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ளும் அரசு விழாக்கள் இரண்டுநாள்கள் நடைபெற்று வரும் அரசு விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், 70.27 கோடி செலவில் 91 முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தார். மேலும் புதிய பேருந்து நிலையம் உட்பட 340.21 கோடி மதிப்பில் 246 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 1,71,169 பயனாளிகளுக்கு 693.03 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “1963-ம் ஆண்டில் நடைபெற்ற திருவண்ணாமலை இடைத்தேர்தல்தான் 1967-ம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்தது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ திட்டத்தைத் திருவண்ணாமலையிலிருந்துதான் நான் தொடங்கினேன். 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தேர்தல் பிரசாரத்திற்குக் கருணாநிதி இங்கு வந்த போது, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் அண்ணாமலையார் கோயில் சென்றால், ஆன்மிகப் பணிகள் தொய்வடையும் என பக்தர்களும், ஊர்பெரியவர்களும் சொன்னார்கள்.

நாங்கள் வெற்றிபெற்று அடுத்து அமையவிருக்கும் ஆட்சி கவனத்திற்குக் கொண்டு செல்வேன் என்று சொன்னார் கருணாநிதி. நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்று மத்திய அரசிடம் பேசி திருவண்ணாமலை கோயிலை மீட்டுக் கொடுத்தது திமுக என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. திருவண்ணாமலைக்கும் திமுகவிற்கு நெருங்கிய உறவு இருக்கிறது. இன்றைக்கு மதத்தின் பெயரால் அரசியல் நடத்துபவர்களுக்கு இதெல்லாம் தெரியாது. அண்ணாமலையார் கோயில் என்பது தமிழ்நாட்டின் சொத்து அதைக் கட்டிக் காத்தது திமுக அரசு.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 1121 பண்ணைக் குட்டைகளை அமைத்து சாதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த பண்ணை குட்டைகளில் மீன் வளர்ப்பு நடைபெறுகிறது. பண்ணை குட்டை கரைகளில் காய்கறி, பழச் செடிகள் நடப்பட்டு விவசாயிகள் பயன்பெற்றுள்ளார்கள். இந்த நடவடிக்கைகளின் காரணமாகத் திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 6 வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதேபோல அனைத்து மாவட்டங்களும் செயல்பட வேண்டும் ” என்றார்.

சிலை திறப்பு

திருவண்ணாமலையில் கலைஞர் சிலையையும், அண்ணா நுழைவு வாயிலையும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார் . திருவண்ணாமலையில் அருணை நகரில் அண்ணா நுழைவு வாயில், கலைஞர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 8 அடி உயரம் கொண்ட வெண்கல கலைஞர் சிலையை திறந்து வைத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in