`இந்தியாவின் ஒற்றுமைக்கு உலை வைப்பவர்கள் இவர்கள்தான்'- பாஜகவை சாடிய முதல்வர் ஸ்டாலின்

`இந்தியாவின் ஒற்றுமைக்கு உலை வைப்பவர்கள் இவர்கள்தான்'- பாஜகவை சாடிய முதல்வர் ஸ்டாலின்

திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில உரிமை மீட்பு எழுச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக உரையாற்றினார்.

அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “சமூக நல்லிணக்கத்தைக் கெடுப்பது, மாநில உரிமைகளை சிதைப்பது என இந்திய நாட்டிற்கு இரண்டு மாபெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இரண்டுமே மக்களுக்கு எதிரானவை. பல்வேறு மொழி, இனம், பண்பாடுகளைக் கொண்ட மக்கள், வேற்றுமையில் ஒற்றுமை என்ற உயர்ந்த குறிக்கோளோடு இந்தியாவில் வாழ்ந்து வருகிறோம். அனைத்து மொழிகளுக்கும் சமமான மரியாதை, அனைத்து தேசிய இனங்களுக்கும் சமமான உரிமை, அனைத்து மதத்தவருக்கும் சமமான வழிபாட்டு உரிமைகள், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்திருந்தாலும் அண்டை மாநிலங்களோடு நட்புறவு என எத்தனையோ நல்ல நோக்கங்களுடன் அமைதியாக இந்தியா இருப்பதைச் சிலர் விரும்பவில்லை.

இதைச் சிதைப்பதை நோக்கமாகக் கொண்டு சிலர் செயல்பட்டு வருகிறார்கள். இத்தகைய சக்திகள்தான் தேச விரோத சக்திகள். இவர்கள்தான் நாட்டினுடைய எதிரிகள். இந்தியாவின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் உலை வைப்பவர்கள் இவர்கள்தான். ஆனால் இவர்கள் நம்மைப்பார்த்து தேச விரோதிகள், நாட்டுக்கு எதிரிகள் என்று சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது. நாம் அனைவரும் ஒருதாய் மக்கள் என்று பேசுவது தேச விரோதமா அல்லது ஒரே மதம், ஒரே மொழிதான் இருக்க வேண்டும் என்று சொல்வது தேசவிரோதமா? இந்தியா முழுக்க இன்று கேட்கப்பட வேண்டிய கேள்வி இதுதான்” என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in