முதல் முறையாக ட்விட்டர் ஸ்பேஸில் உரையாற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்!

முதல் முறையாக ட்விட்டர் ஸ்பேஸில் உரையாற்றுகிறார் முதல்வர் ஸ்டாலின்!

திமுக தொழில்நுட்ப பிரிவு சார்பாக ட்விட்டர் ஸ்பேஸில்  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  உரையாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பெரியார் மற்றும் அண்ணாதுரை ஆகியோர் செப்டம்பர் மாதத்தில் பிறந்த காரணத்தாலும், அதே மாதத்தில் திமுக தொடங்கப்பட்டதாலும், செப்டம்பர் மாதத்தை ‘திராவிட மாதம்’ என திமுக சார்பில் கொண்டாடி வருகிறார்கள். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தைத் திராவிட மாதமாகக் கொண்டாடும் வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், ட்விட்டர் ஸ்பேஸில் ‘திராவிடத்தைக் கொண்டாடுவோம்’ என்ற நிகழ்ச்சியை  நடத்தி வருகிறார்கள்.

இந்த தளத்தின் வாயிலாக திமுகவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலர்  பங்கேற்று உரையாற்றி வருகின்றனர். நாளையுடன் செப்டம்பர் மாதம் முடிவடைய உள்ளதால், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாளை இரவு 8 மணிக்கு ட்விட்டர் ஸ்பேஸில் உரை நிகழ்த்த உள்ளார். நாளை நடைபெறும் நிறைவு நாளில் முதல் முறையாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ட்விட்டர் ஸ்பேஸ் நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in