`தன்மானம், இனமானம் இல்லாதவர்கள்தான் திமுக அரசை விமர்சிக்கிறார்கள்’- மு.க.ஸ்டாலின் விளாசல்!

`தன்மானம், இனமானம் இல்லாதவர்கள்தான் திமுக அரசை விமர்சிக்கிறார்கள்’- மு.க.ஸ்டாலின் விளாசல்!

``தன்மானம் இல்லாத, இனமானம் என்றால் என்னவென்றே தெரியாத கூட்டம்தான் இன்று திமுக அரசை விமர்சனம் செய்கிறது'' என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவை சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் 272 கோடி ரூபாய் செலவில் முடிவுற்ற பணிகளை மக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “எதிர்கால தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை உங்கள் முகங்களில் காணும் மலர்ச்சியைக் கொண்டு அறிந்து கொள்கிறேன். தனக்கென ஒரு இலக்கை வைத்து வென்று காட்டக் கூடியவராக செந்தில் பாலாஜி விளங்கிக் கொண்டிருக்கிறார். பெருந்தொழில்கள் மட்டுமல்லாது சிறு,குறு, நடுத்தர தொழில்கள் ஏராளமாக இருக்கக் கூடிய நகரம் கோவை. பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்க்கை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி குறியீடுகள் பலமான அளவீடுகளை வழங்கக் கூடிய மாவட்டமாகக் கோவை மாவட்டம் அமைந்துள்ளது.

குடியரசுத் தலைவர் மற்றும் துணைத் தலைவரைச் சந்திப்பதற்காக அண்மையில் டெல்லிக்குச் சென்றிருந்தேன். அப்போது அவர்கள் தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பற்றி அவர்கள் என்னிடம் கேட்டார்கள். தமிழகத்தைப் பற்றி ஒரு உயர்ந்த கருத்து அவர்கள் வைத்திருந்ததை நான் பார்த்தேன். திராவிட முன்னேற்றக் கழகம் பலமான அடித்தளமிட்டதே இதற்குக் காரணம். நம்முடைய செயல்திட்டங்களைப் பிற மாநிலங்களில் பின்பற்றி வருகிறார்கள். ஆனால் இங்கிருக்கும் சிலரால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. திமுக அரசு எந்த வாக்குறுதியும் நிறைவேற்ற விலை என பொத்தாம் பொதுவாகச் சொல்கிறார்கள். அப்படிச் சொல்பவர்கள் மக்களோடு மக்களாக வந்து மக்களிடத்தில் கேட்க வேண்டும். பேட்டி கொடுப்பதற்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வந்து பேட்டி கொடுத்துவிட்டுச் சென்று விடுகிறார்கள். தமிழக அரசின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ள மனமில்லாமல் புலம்பிக் கொண்டு சிலர் அளித்துக் கொண்டிருக்கும் பேட்டிகளுக்கு நான் எப்போதும் முக்கியத்துவம் தருவது கிடையாது. தன்மானம் இல்லாத, இனமானம் என்றால் என்னவென்றே தெரியாத கூட்டம்தான் இன்று திமுக அரசை விமர்சனம் செய்கிறது” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in