'கலகத் தலைவன்' படம் பார்த்து விட்டீர்களா?: அமைச்சரை வினவும் முதல்வர் ஸ்டாலின் வீடியோ வைரல்

'கலகத் தலைவன்' படம் பார்த்து விட்டீர்களா?: அமைச்சரை வினவும் முதல்வர் ஸ்டாலின் வீடியோ வைரல்

கலகத் தலைவன் படம் பார்த்துவிட்டீர்களா என நடைப்பயிற்சியின் போது முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

திமுக இளைஞர் அணித் தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான கலகத் தலைவன் திரைப்படம் கடந்த 18ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே அந்தப் படத்தை முதல்வர் ஸ்டாலின் பார்த்திருந்தார். சமுதாய அக்கறையோடு இந்தப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக முதல்வர் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை செம்மொழி பூங்காவில் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது ‘கலகத் தலைவன்’ படம் பார்த்தீர்களா? என அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் வினவினார்.

அதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன்," முதல் நாளே தியேட்டர் சென்று படத்தைப் பார்த்துவிட்டேன். படம் நன்றாக இருக்கிறது. சில திரைப்படங்களில் பாடல் வரும் போதே சிலர் வெளியில் சென்றுவிடுவார்கள். ஆனால் இந்தப் படத்தில் அனைவரும் பாடல்களை ரசித்துப் பார்த்தார்கள்" என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

ஏற்கெனவே ‘லவ் டுடே’ படத்தைப் பார்த்த முதல்வர் குறித்து அவரது மகன் உதயநிதி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை, "படம் பார்க்க நேரமிருக்கிறது. வெள்ளத்தைப் பார்க்க நேரமில்லை" என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார். இந்நிலையில் தற்போது முதல்வரின் இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in