பொதிகை எக்ஸ்பிரஸில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசிக்கு பயணம்!

பொதிகை எக்ஸ்பிரஸில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசிக்கு பயணம்!

தென்காசியில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ரயில் மூலமாக செல்ல திட்டமிட்டுள்ளார்.

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தென்காசி மாவட்டத்திற்கு முதன்முறையாகச் செல்ல இருக்கிறார். தென்மாவட்டங்களுக்கு விமானம் மூலம் எப்போதும் முதல்வர் பயணம் செய்வார். ஆனால் தென்காசி பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதல் முறையாக ரயில் மூலம் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி இன்று இரவு 8.40 மணிக்குச் சென்னை எழும்பூரிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸில் பயணம் மேற்கொள்ள உள்ளார். நாளை காலை 7.30 மணிக்கு இந்த ரயில் தென்காசிக்கு சென்றடையும்.

அங்கிருந்து குற்றாலம் செல்லும் முதல்வர், அங்குள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு அதன் பின்னர் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதன் பிறகு மதுரைக்குச் சென்று இரவு மதுரையில் தங்குகிறார். மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட பிறகு விமானம் மூலம் சென்னை திரும்ப உள்ளார். முதல்வரின் ரயில் பயணத்தை முன்னிட்டு எழும்பூர் மற்றும் தென்காசி ரயில் நிலையங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in