மாறாத தலைமைப் பதவிகள்: மு.க.ஸ்டாலினுடன் வேட்பு மனுத் தாக்கல் செய்த திமுக நிர்வாகிகள்!

மாறாத தலைமைப் பதவிகள்: மு.க.ஸ்டாலினுடன் வேட்பு மனுத் தாக்கல் செய்த திமுக நிர்வாகிகள்!

திமுக தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

திமுகவின் 15-வது அமைப்புத் தேர்தல் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவுபெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு அக்டோபர் 9-ம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி 'விங்க்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்து தொண்டர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் வேட்புமனுவை வழங்கினார். அவருடன் பொதுச் செயலாளர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அதற்கு முன்பாக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார். திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், தணிக்கைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு வரும் ஞாயிறு அன்று தேர்தல் நடைபெற உள்ளது. தலைவர், பொதுச் செயலாளர்கள், பொருளாளர் பதவிக்கு அதே பதவிகளில் வகித்தவர்கள் மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in