1,250 நெல் ரகங்களை மீட்டு எடுத்தவர்: பொறியியல் பட்டதாரியை கௌரவிக்கும் தமிழக முதல்வர்!

1,250 நெல் ரகங்களை மீட்டு எடுத்தவர்: பொறியியல் பட்டதாரியை கௌரவிக்கும் தமிழக முதல்வர்!

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்குப் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த பொறியியல் பட்டதாரி சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த குரவபுலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவரஞ்சனி. பொறியியல் பட்டதாரியான இவர் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார். விவசாயத்தைப் பின்னணியாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த இவர், நெல் உள்ளிட்ட தானியங்கள், காய்கறிகள் பயிரிடுவதில் மிகுந்த ஆர்வமாக உள்ளவர். பாரம்பரிய நெல் ரகங்களைச் சேகரித்து வரும் இவர் தமிழக நெல் ரகமான 174 உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அழிந்து வரும் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டுள்ளார். இவரின் முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், இவரின் பணியைப் பாராட்டி தமிழக அரசு இவருக்கு விருது வழங்க உள்ளது.

முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்குப் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த சிவரஞ்சனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நெல் ஜெயராமனுக்குப் பின் பல மாநிலங்களுக்குச் சென்று 1250 நெல் ரகங்களை மீட்டு எடுத்தவர் சிவரஞ்சனி. இதன் காரணமாகவே முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு இவர் தேர்வாகியுள்ளார். சுதந்திர தின விழாவில் விருதும், ஒரு லட்சம் பரிசுத் தொகையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவிக்க உள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in