மு.க.அழகிரி, உதயநிதி சந்திப்பு பொங்கல் பண்டிகை: தயா அழகிரி ட்விட்

மு.க.அழகிரி, உதயநிதி  சந்திப்பு பொங்கல் பண்டிகை:  தயா அழகிரி ட்விட்

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது தந்தை மு.க.அழகிரியை சந்தித்ததை பொங்கல் பண்டிகை எனக்குறிப்பிட்டு ஹார்ட் போட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் தயா அழகிரி பதிவிட்டுள்ளார்.

மதுரையில் இன்று நடைபெறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைக்க தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் இருந்து சத்யசாய் நகரில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வீட்டுக்குச் சென்றார். அவருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் சென்றனர்.

அவர்களை வரவேற்று மு.க.அழகிரி சால்வை அணிவித்தார். உதயநிதி ஸ்டாலினை காந்தி அழகிரியும் மகிழ்ச்சி பொங்க வரவேற்றார். உதயநிதி ஸ்டாலினும் தனது பெரியப்பா மு.க.அழகிரிக்கு சால்வை அணிவித்தார்.

இந்த சந்திப்பை பொங்கல் பண்டிகையென தனது ட்விட்டர் பக்கத்தில் மு.க.அழகிரியின் மகனான தயா அழகிரி பதிவிட்டுள்ளார். ஹார்ட் போட்டு அவர் பதிவிட்டுள்ள இந்த பதிவு வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in