அதிமுகவுடன் அண்ணன் - தம்பி உறவுன்னா... அண்ணன் மு.க.அழகிரி யார்?

மு.க.அழகிரியுடன் கபிலன்
மு.க.அழகிரியுடன் கபிலன்

திமுகவும் அதிமுகவும் அண்ணன் - தம்பி மாதிரி. அதிமுகவுடனான தேர்தல் போட்டியும் அண்ணன் - தம்பி போட்டியாகத்தான் இருந்தது. ஆனால் இப்போது, சகல அதிகாரங்களையும் கையில் வைத்திருப்போரிடம் (பாஜக) போட்டியிட வேண்டியிருக்கிறது” என அமைச்சர் கே.என்.நேரு ஒரு பேச்சுக்குச் சொன்னதை உடும்புப் பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள் அஞ்சா நெஞ்சன் அழகிரியின் விசுவாசிகள்.

”தலைவர் கலைஞர் தனது வாழ்நாள் எதிரியாக நினைத்துப் போராடிய ‘அதிமுக’வுடன் அண்ணன் - தம்பி உறவு என்றால் மு.க.அழகிரி யார்? இன்னும் எத்தனைகாலம் தான் அண்ணனைக் கட்சிப்பணிக்கு பயன்படுத்தாமல் ஒதுக்கிவைப்பீர்கள்?” என்றெல்லாம் வாட்ஸ் - அப்பில் கருத்துப் பதிவிட்டு வருகிறார்கள்.

இதற்குப் பிள்ளையார் சுழிபோட்ட கன்னியாகுமரி கபிலனிடம் இதுகுறித்து கேட்டால், “அண்ணன் சொல்லியெல்லாம் இந்தப் பதிவைப் போடவில்லை. என்னைப் போன்ற பல்லாயிரக் கணக்கான திமுக தொண்டர்களின் மனக்குமுறல் இது. பாஜக என்னும் பேராபத்தை எதிர்கொள்ள அண்ணன் மு.க.அழகிரியை திமுக தலைமை பயன்படுத்தத் தவறிவிட்டது” என்று ஆதங்கத்தைக் கொட்டுகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in