`கேரள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வேன்'- முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் உறுதி

`கேரள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வேன்'- முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் உறுதி

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும், அணையிலிருந்து விதிகளின் படி தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும் கேரள முதல்வருக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.

கேரள பகுதியில் அதிக அளவு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக் கேரள முதல்வர் பிரனாயி விஜயன் கடந்த 5-ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் முல்லைப் பெரியாறு நிலை பற்றி அவதூறு பரப்பும் விதத்தில் கேரளாவில் உள்ள சிலர் பாடல்களை வெளியிட்டு வந்தனர். இது போன்ற அவதூறு பரப்புவதைத் தடுத்து நிறுத்துமாறு தேனி மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதியினர் கடிதம் எழுதி இருந்தனர்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வருக்குக் இன்று கடிதம் எழுதி இருக்கிறார். அதில், “நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138 அடியாக இருந்தது. கடந்த 5-ம் தேதி முதல் வினாடிக்கு 5000 கன அடி வீதம் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது. அணையிலிருந்து விதிகளின் படி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு அருகில் வசிக்கும் கேரள மக்களின் பாதுகாப்பினை தமிழக அரசு உறுதி செய்யும்” என குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in