பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம்... முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம்!

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

மோடியைப் போல தமிழ்நாட்டை வஞ்சித்த பிரதமர் வேறு யாருமே இல்லை. தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி தராத மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். பாஜகவிற்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் இன்று திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். திமுக கூட்டணி சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், நெல்லை தொகுதி வேட்பாளர் ராபர்ட் புரூஸ், விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் தாரகை ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

நாங்குநேரி பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "வீரத்தின் விளை நிலமான நெல்லை சீமைக்கு வந்துள்ளேன். தற்போது அடிக்கடி தமிழகத்திற்கு வரும் பிரதமர் திருநெல்வேலிக்கு தற்போது வருகை தந்திருந்தார். வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது பிரதமர் மோடி எங்கே போயிருந்தார்? வெள்ள பாதிப்பு நிதி அளித்தீர்களா? 2 இயற்கை பேரிடர்கள் வந்தபோதும் தமிழகத்திற்கு ஒரு சல்லிக் காசு கூட பிரதமர் மோடி தரவில்லை. தமிழகத்தில் நிகழ்ந்த இரண்டு பேரிடர் பாதிப்புகளுக்கு நிவாரணமாக ரூ. 37 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசிடம் கேட்டும் இதுவரை தரவில்லை. தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதி தராத மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்,

நீங்கள் அளிக்கிற வாக்குதான் இந்தியாவின் அடுத்த பிரதமராக ஒரு ஜனநாயகவாதி வருவதை உறுதி செய்யப் போகிறது. தமிழ்நாட்டை மதிக்கிற, தமிழர்களை வெறுக்காத ஒருவர் பிரதமர் ஆக வேண்டும் என்றால் அது உங்கள் கையில் தான் இருக்கிறது. அதற்கு பிரதமர் மோடி தோற்கடிக்கப்பட வேண்டும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு திமுக, காங்கிரஸ் காரணம் என மோடி சொல்கிறார், கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பது நீங்கள் தான்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

மோடியைப் போல தமிழ்நாட்டை வஞ்சித்த பிரதமர் வேறு யாருமே இல்லை. தமிழகத்துக்கு பாஜக அறிவித்த ஒரே சிறப்புத் திட்டம் மதுரை எய்ம்ஸ் மட்டும்தான். அதுவும் 10 ஆண்டுகளாகியும் வரவில்லை. ஆட்சி, பதவி இருப்பதற்காக பாஜகவினர் என்ன வேண்டுமென்றாலும் ஆணவமாக பேசுவார்களா?. ஒரு மத்திய அமைச்சர் வெள்ள நிவாரணம் கேட்டால் தமிழர்கள் பிச்சைக்காரர்கள் என்கிறார். மற்றொரு மத்திய அமைச்சர் தமிழர்களை தீவிரவாதிகள் என்கிறார். தமிழர்கள் என்றால் பாஜகவிற்கு ஏன் இவ்வளவு வெறுப்பு? வன்மம்?. பாஜகவிற்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் துரோகம். பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்" என முதல்வர் ஸ்டாலின் பேசினார்

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!

50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!

அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

நிலைமை மாறிடுச்சு... கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்... பகீர் கிளப்பிய முதல்வர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in