எடப்பாடி பழனிசாமி அதுபோல பேசியது மகிழ்ச்சியளிக்கிறது... மனம் திறந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

திமுகவுக்கும் அதிமுகவிற்கும்தான் போட்டி என பழனிசாமி பேசியுள்ளார் அந்த அளவிற்காவது அவருக்கு புரிதல் இருக்கே என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம் சிந்தலக்கரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “

தேர்தல் மூலம் ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற அறப்போராட்டம் இந்த தேர்தல். தூத்துக்குடி மக்களோடு மக்களாய் கனிமொழி உள்ளார். தமிழகம் மற்றும் ஒட்டுமொத்த இந்தியாவிற்காக பேசுபவர் கனிமொழி. சர்வாதிகாரியிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல் இது.

கச்சத்தீவு மீட்கப்படும் என்று சுஷ்மா சுவராஜ் சொன்னார். இன்று வரை பாஜக அதனை செய்துள்ளதா?. மீனவர்கள் விவகாரத்தில் வாய் திறக்காத மோடி விஸ்வ குருவா? அல்லது மவுனகுருவா?. மீனவர்கள் கைது, அபராதம் படகு பறிமுதல் என மோடி ஆட்சியில் இலங்கை அறிவிக்கப்படாத போர் புரிந்து வருகிறது.தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதலை பிரதமர் மோடி தட்டிகேட்க தயங்குவது ஏன்?.

பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி
பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டுக்காக எந்த திட்டத்தையும் செய்யாதவர் மோடி. பெயர் மட்டும் பிரதமர் வீடு கட்டும் திட்டம். அதில், 60% நிதி மாநில அரசுதான் தருகிறது. ஆனால் அதில் ஸ்டிக்கர் ஒட்டி கேவலமாக பிரசாரம் செய்கின்றனர் பாஜக-வினர். பாஜக ஆட்சிக்கு வந்தால் கருப்பு பணத்தை மீட்டு ரூ.15 லட்சம் தருவோம் என்று சொன்னீர்களே, செய்தீர்களா?. பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்து ஆடுகிறது.

விவசாயிகளை எதிரி போல் நடத்துவதுதான் பாஜக அரசின் மாடலா?. திமுக அரசின் கொள்கை எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே. பழனிசாமி யார்? நேற்று யாரோடு இருந்தார்? இன்று யாரோடு இருக்கிறார்? நாளை யாருடன் இருப்பார்?. நேரத்திற்கு ஏற்றார் போல் யார் மாறுவார் என்பதை மக்கள் எடை போட்டு தீர்ப்பளிப்பார்கள். திமுகவுக்கும் அதிமுகவிற்கும்தான் போட்டி என பழனிசாமி பேசியுள்ளார் அந்த அளவிற்காவது அவருக்கு புரிதல் இருக்கே என்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பழனிசாமி அவர்களே களத்தில் மோதுவோம் மக்கள் தீர்ப்பளிக்கட்டும்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தூத்துக்குடியில் துப்பாக்கிசூடு நடத்தி 13 பேர் கொலை செய்யப்பட்டனர். அதைக்கூட டிவியை பார்த்துதான் தெரிந்துகொண்டேன் என கூறினார். தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தை மறக்க முடியுமா? தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தற்போது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது. எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்துதான் துப்பாக்கிச்சூடு நடந்ததாக விசாரணை ஆணையம் கூறியது. தூத்துக்குடி கலவரத்தில் ஈடுபடாதவர்கள் மீது அதிமுக. ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்பட்டது. கடந்த கால அதிமுக. ஆட்சியில் வைக்கப்பட்ட கரும்புள்ளி தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நீதிமன்றத்தில் வாதிட்டு வென்றது திராவிடமாடல் ஆட்சி.

என்னைப் பற்றி அவதூறுகள் பரப்பி, விமர்சித்து, என்னை எஃகு போல நெஞ்சுறுதி கொண்டவனாக மாற்றியுள்ளீர்களோ, அதேபோல தற்போது உதய நிதியையும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். இது 2வது மகிழ்ச்சியான விஷயம். மோடியை பற்றி பாசாங்கிற்கு கூட விமர்சனம் செய்யாதவர் எடப்பாடி பழனிசாமி. தமிழகத்தின் உரிமைகளை அடகு வைத்தவர்தான் எடப்பாடி பழனிசாமி” என்று தெரிவித்துள்ளார்

இதையும் வாசிக்கலாமே...

அச்சச்சோ வீடியோ... ரோகித் சர்மா மனைவியை பின்னாலிருந்து கட்டிப் பிடித்த ஹர்திக்!

'ஜெய் ஸ்ரீ ராம்’ என்று சொன்ன சிறுவனை கொலைவெறியுடன் தாக்கிய கும்பல்!

லேப் டாப் திருடுவது தான் இவரது வேலை... ஐசிஐசிஐ வங்கி பெண் ஊழியர் கைது!

மீண்டும் ஹிட்டான கேரள பாடல்... வைரலாகும் லுங்கி டான்ஸ் வீடியோ!

'சிங்கப்பூர் சேலை அந்த செவத்தப் பொண்ணு மேல'... சீனாவை கலக்கும் இளம்பெண்ணின் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in