மிசோரம் தேர்தலில் களமிறங்கும் 12 கோடீஸ்வரர்கள்! ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் முதலிடம்!

மிசோரம் மாநில தேர்தல்
மிசோரம் மாநில தேர்தல்

மிசோரம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 174 வேட்பாளர்களில் 112 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இதில் முதலிடத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் ஆண்ட்ரூ இடம் பிடித்துள்ளார்.

மிசோரம் மாநிலத்தில் மொத்தம் உள்ள 40 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற நவம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சியினர் வேட்பாளர்கள் அறிவிப்பு மற்றும் வேட்பு மனுத் தாக்கலில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில், மிசோரம் தேர்தலில் போட்டியிடும் 174 வேட்பாளர்களில் 112 பேர் கோடீஸ்வரர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஐசால் வடக்கு-3 தொகுதியில் போட்டியிடும் கட்சியின் மாநிலத் தலைவர் ஆண்ட்ரூ பச்சாவ் 8.93 கோடி சொத்துக்களுடன் முதலிடம் பிடித்துள்ளார்.

தனியார் அமைப்பு ஆய்வில் தகவல்
தனியார் அமைப்பு ஆய்வில் தகவல்

அவரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் செர்ச்சிப் தொகுதியில் போட்டியிடும் வான்லால்டுலுவாங்கா, 55.6 கோடி ரூபாய் சொத்துக்களுடன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். ஜோரம் மக்கள் அமைப்பின் கின்சாலாலா 36.9 கோடி ரூபாய் சொத்துக்களுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார். இவர் செம்பா வடக்கு தொகுதியில் போட்டியிட உள்ளார்.

இந்த பட்டியலில் மிகவும் ஏழையான வேட்பாளராக செர்ச்சிப் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராம்லன்-இடேனா உள்ளார். இவரது மொத்த அசையும் சொத்தின் மதிப்பு 1,500 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிசோரம் வாக்காளர்கள்
மிசோரம் வாக்காளர்கள்

கடந்த 2018ம் ஆண்டு மிசோரம் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்ட சைலோ 100 கோடி ரூபாய் சொத்துக்களை காட்டி இருந்த நிலையில் இவ்வாண்டு அவரது சொத்து பல மடங்கு குறைந்து ரூ.26.24 கோடி மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் வேட்பாளர்களில் காங்கிரஸ் வேட்பாளர் மரியம் ரூ.18.63 கோடி சொத்துக்களுடன் முதல் இடத்தில் உள்ளார். இந்த தேர்தலில் போட்டியிடும் துணை முதலமைச்சர் தான்பூய் 80 வயதுடன் மிக மூத்த வயதுடைய வேட்பாளராக உள்ளார். 31 வயதில் பெண் வேட்பாளர் லால்ருவாத்பெல்லி மற்றும் பாஜக வேட்பாளர் வான்மிங்தங்கா ஆகியோர் குறைந்த வயதுடைய வேட்பாளர்களாக உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in