நிப் தங்கம், மற்ற பாகங்கள் வெள்ளி: விஜய் வசந்தின் 1.5 லட்சம் மதிப்புள்ள பேனா திடீர் மாயம்

விஜய் வசந்த்
விஜய் வசந்த்

கன்னியாகுமரி எம்.பி விஜய் வசந்த் தன் பேனாவைக் காணவில்லை என சென்னை கிண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மாயமான பேனாவின் மதிப்பு ஒன்றரை லட்சம் ரூபாய் எனவும் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் யஸ்வந்த் சின்ஹா காங்கிரஸ் கட்சியினரைச் சந்தித்து ஆதரவு கோரினார். இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் சென்றிருந்தார். அப்போது, தனது ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள பேனா மாயமானதாக புகார் கொடுத்துள்ளார் விஜய் வசந்த்.

மேலும் அந்த புகாரில், ‘இந்த பேனா என்னோடு உணர்வுப்பூர்வமாக தொடர்புடையது. என் அப்பா வசந்தகுமார் பயன்படுத்திவந்த பேனா இது. அவர் நினைவாக நான் இந்தப் பேனாவை வைத்திருந்தேன். மாண்ட் பிளாங் என்னும் அந்த பேனாவின் நிப் தங்கத்தாலும், மற்ற பாகங்கள் வெள்ளியினாலும் ஆனது. அதன் சந்தை மதிப்பு ஒன்றரை லட்ச ரூபாய். என் அப்பாவின் நினைவாக பயன்படுத்திவந்த அந்தப் பேனாவை மீட்டுத்தர வேண்டும்” என புகார் கொடுத்துள்ளார்.

எம்.பி, பேனா மாயமானது குறித்து போலீஸில் புகார் கொடுத்திருக்கும் சம்பவம் காங்கிரஸ் கட்சியினர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in