சிறுபான்மை மக்களை மத்திய அரசு ஒடுக்குகிறது!

நடிகை ரோகிணி குற்றச்சாட்டு
பொதுக்கூட்டத்தில் பேசும் நடிகை ரோகிணி.
பொதுக்கூட்டத்தில் பேசும் நடிகை ரோகிணி.

சிறுபான்மை மக்களைத் திட்டமிட்டு மத்திய அரசு ஒடுக்குவதாக நடிகை ரோகிணி குற்றம் சாட்டியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டு பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தத்தில் நேற்று இரவு நடைபெற்றது. அதில் நடிகை ரோகிணி பேசியதாவது: சுதந்திரப் போராட்ட காலம்போல, இன்றும் இந்த நாட்டைக் காப்பாற்றப் போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நாம் சுதந்திர இந்தியாவில் தான் வாழ்கிறோமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், அதுபோன்ற நிகழ்வுகள் இந்தியா முழுவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.

இந்தியாவில் யார் படிக்க வேண்டும். யார் படிக்கக்கூடாது என்பதை தீர்மானமாக செயல்படுத்தி வருகிறார்கள். நீ ஹிஜாப் போட்டிருக்கிறாயா? உனக்கு படிக்க உரிமை இல்லை என்று சொல்கிறார்கள். ஹிஜாப் அணிந்த சில மாணவிகளைத் தேர்வு எழுத அனுமதித்த சில ஆசிரியர்களையும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். நாங்கள் சொல்வதுபோல நீங்கள் நடந்து கொண்டால்தான் படிக்க மட்டுமல்ல, வாழ முடியும் என்கிறார்கள். சிறுபான்மை மக்களை மிக கவனமாக வளர விடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இதுக்கு ஒரு அரசே துணை போகிறது. இதை கலைகள் மூலமாக மக்களுக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டியது மிக அவசியம்.

இவ்வாறு நடிகை ரோகிணி பேசினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in