தேவர் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மரியாதை!

தேவர் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தியை ஒட்டி மதுரையில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது பிறந்தநாள் மற்றும், 60-வது குருபூஜை விழா பசும்பொன்னில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை ஒட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கரின் சிலைக்கு திமுக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேவர் ஜெயந்தியை ஒட்டி மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு இருந்தது.

ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி 10,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள் இன்று மரியாதை செலுத்த உள்ளதால் காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in