நீலகிரியில் நூலிழையில் உயிர் தப்பிய அமைச்சர்: ஆய்வுக்குச் சென்ற இடத்தில் நடந்தது என்ன?

நீலகிரியில் நூலிழையில் உயிர் தப்பிய அமைச்சர்: ஆய்வுக்குச் சென்ற இடத்தில் நடந்தது என்ன?

நீலகிரியில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்யச் சென்ற வனத்துறை அமைச்சரின் வாகனம் விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டிட கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அப்பணிகளை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று பார்வையிட்டார். தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக அந்தப் பகுதி சேறும், சகதியுமாக இருந்தது. அதனால், தனது வாகனத்தில் இருந்து மாற்று வாகனத்தில் சென்று அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். இதன் பின் தன் வாகனத்தில் செல்வதற்காக பிக் அப் டிரக் மூலம் அவர் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அவர் வந்த வாகனம் திடீரென நிலைதடுமாறியது. இதனால் 15 அடி பள்ளத்தில் அவர் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. ஆனால், வாகன ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு பிரேக் பிடித்தால் வாகனம் பள்ளத்தில் கவிழாமல் தப்பியது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் அறிந்தால் அதிகாரிகளும், திமுகவினரும் பதறி ஓடி வந்தனர். ஆனால், அமைச்சருக்கு காயம் ஏற்படவில்லை என்று தெரிந்ததால் ஆசுவாசமடைந்தனர். அத்துடன் ஓட்டுநருக்கு நன்றியை அவர்கள் தெரிவித்தனர். இதன் பின் அங்கிருந்து நடந்தே தனது வாகனம் இருந்த இடத்திற்கு அமைச்சர் ராமச்சந்திரன் சென்றார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in