அதிகாலையிலேயே உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்: மழைநீர் பாதிப்பு பணிகளை ஆய்வு செய்ய களத்தில் இறங்கிய அமைச்சர்கள்

அதிகாலையிலேயே உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின்: மழைநீர் பாதிப்பு பணிகளை ஆய்வு செய்ய  களத்தில் இறங்கிய அமைச்சர்கள்

மழைநீர் தேங்கும் இடங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின், அதிகாலையிலேயே உத்தரவு பிறப்பித்ததால் நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம் என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

சென்னையில் பெய்துவரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையில் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் எ.வ. வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் பார்வையிட்டு வருகின்றனர்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த எ.வ.வேலு, “சைதாப்பேட்டை அண்ணாசாலை, கிண்டி, ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத் தடுப்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவடையும் இந்த நேரத்தில், நாம் எதிர்பாராத அளவிற்கு வடகிழக்கு பருவமழை அதிக அளவு பெய்துவருகிறது. நேற்று இரவு முழுவதுமே சென்னையில் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. இன்று காலையில் என்னையும், அமைச்சர் மா.சுப்பிரமணியனையும் செல்போனில் தொடர்புகொண்ட முதல்வர் ஸ்டாலின், சென்னையில் அதிகாலையிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தண்ணீர் தேங்குகிறதா எனவும் மக்களுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த வகையில் நாங்கள் சைதாப்பேட்டை, அண்ணாசாலை பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருக்கிறதா என பார்வையிடுவதற்காக வந்தோம். ஆனால் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை.

சைதாப்பேட்டையில் முடிக்கப்படாமல் இருக்கும் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். போக்குவரத்து நெரிசல் காரணமாக இரவு நேரங்களில்தான் அந்தப் பணிகளைச் செய்ய முடியும். அடுத்த செவ்வாய்க் கிழமைக்குள் பணிகள் நிறைவடைந்துவிடும்.

அடுத்ததாக தென்சென்னை பகுதிகளுக்கு நாங்கள் ஆய்வு செய்ய உள்ளோம். மாநகராட்சி அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் நாங்கள் தொலைபேசியில் பேசினோம். அவர்கள் எங்கேயும் சாலைகளில் தண்ணீர் தேங்கவில்லை எனக் கூறியிருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் நிதி ஒதுக்காமல், திட்டங்களை மட்டும் அறிவித்துவிட்டுச் சென்று விட்டார்கள். இதனால் அவர்கள் அறிவித்த பெரும்பாலான இடங்களில் பாதிப்பு உள்ளது. தற்போதைய அரசு தொடர்ந்து நேரடியாக கள ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்து வருகிறோம்.” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in