உங்க மகன் எப்படி பிசிசிஐ தலைவரானார்... அமித் ஷாவுக்கு உதயநிதி பதிலடி!

உதயநிதி பதிலடி
உதயநிதி பதிலடி

"நான் மக்களை சந்தித்து தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராகி உள்ளேன். உங்கள் மகன் ஜெய்ஷா எப்படி பிசிசிஐ தலைவர் ஆனார்" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக இளைஞர் நிர்வாகி கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், "10 லட்சம் பேர் பங்கேற்கும் திமுக இளைஞரணி மாநாடு விரைவில் நடத்தப்படும் என்றும் திமுக கொள்கைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க 100 பாசறை கூட்டம் நடத்தப்படும் என்றும் நாடாளுமன்ற தேர்தல் பணிகளை முன்னெடுக்கவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக பெறும் என கூறிய உதயநிதி, ``நான் மக்களை சந்தித்து தேர்தலில் போட்டியிட்டு அமைச்சராகி உள்ளேன். உங்கள் மகன் ஜெய்ஷா எப்படி பிசிசிஐ தலைவர் ஆனார். உங்கள் மகன் ஜெய்ஷா எத்தனை மேட்ச் விளையாடி எத்தனை ரன் அடித்திருக்கிறார்'' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு பதில் அளித்தார்.

ராமேஸ்வரத்தில் நேற்று நடந்த அண்ணாமலையின் பாதயாத்திரையை தொடங்கி வைத்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஸ்டாலினுக்கு உதயநிதியை முதல்வராக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கிறது என்றும் இவர்களுக்கு இந்தியாவைப் பற்றியெல்லாம் கவலை இல்லை என்றும் கூறியிருந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in