
மகளிர் உரிமை திட்டத்தின் கீழ், விதிகளை பூர்த்தி செய்கிற ஒரு மகளிர் கூட, விடுபட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் பணியாற்றிட வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், விண்ணப்பம் ஏற்கப்படாதவர்கள், மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான காலம் நேற்று முன்தினத்துடன் முடிவுற்றது. தமிழ்நாடு முழுவதுமிருந்து 11 லட்சம் மேல்முறையீட்டு மனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில், அவற்றை சார் ஆட்சியர், துணை ஆட்சியர், வருவாய் கோட்ட அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும் பணிகளை இன்று அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அப்போது மேல்முறையீடு செய்திருந்த மகளிரில் மூவரிடம் கைபேசி மூலம் தொடர்புகொண்டு அமைச்சர் உதயநிதி பேசினார். அப்போது, அவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை குறித்து அவர் எடுத்துரைத்தார்.
இதையடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விதிகளை பூர்த்தி செய்கிற ஒரு மகளிர் கூட, விடுபட்டுவிடக் கூடாது என்ற அடிப்படையில் பணியாற்றிட அரசு அலுவலர்களை அவர் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் உதயநிதி, ஆய்வுபடங்களை பதிவிட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
ஷவர்மா சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு; கேரளத்தில் மீண்டும் பரபரப்பு!
அதிர்ச்சி... தூக்கில் தொங்கிய 10 ம் வகுப்பு மாணவி! மர்ம மரணமாக போலீஸார் விசாரணை!
பெரும் சோகம்... டேங்கர் லாரியை மறைத்த பனிமூட்டம்... விபத்தில் 12 பேர் உயிரிழப்பு!
தொடர் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலியான பரிதாபம், 50 பேர் காயம்