திமுகவுக்கு போடும் ஓட்டு; மோடிக்கு வைக்கும் வேட்டு... அமைச்சர் உதயநிதி கலகல!

உதயநிதி ஸ்டாலின் சசிகாந்த் செந்தில்
உதயநிதி ஸ்டாலின் சசிகாந்த் செந்தில்

தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கு அளிக்கும் ஓட்டு, பிரதமர் மோடி தலையில் வைக்கும் வேட்டு என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து இன்று தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொன்னேரி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுக அரசின் சாதனைகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை எடுத்துரைத்து அவர் வாக்குகள் சேகரித்தார்.

உதயநிதி ஸ்டாலின் சசிகாந்த் செந்தில்
உதயநிதி ஸ்டாலின் சசிகாந்த் செந்தில்

அப்போது பேசிய அவர், ”ஏப்ரல் 19ம் தேதி திமுக மற்றும் கூட்டணி கட்சியினருக்கு நீங்கள் அளிக்கும் ஓட்டு, பிரதமர் மோடி தலையில் வைக்கும் வேட்டு. திருவள்ளூர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் சசிகாந்த் சாதாரணமானவர் அல்ல. கர்நாடகாவில் பாஜகவின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர். அவரை வேட்பாளராக திருவள்ளூர் தொகுதிக்கு அறிவித்துள்ளதற்கு ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைமைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

உதயநிதி ஸ்டாலின் சசிகாந்த் செந்தில்
உதயநிதி ஸ்டாலின் சசிகாந்த் செந்தில்

மேலும், ”தமிழ்நாட்டில் புயல் மழை வெள்ளத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள் அனைவரும் களத்தில் நின்றிருந்தோம். ஆனால் மத்திய அரசு சார்பில் யாரும் வந்து பார்க்கவில்லை. ஒரு திட்டத்தை அரசு அறிவித்தால் அது எந்த அளவுக்கு மக்களிடம் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை பொறுத்து அதன் வெற்றி அமையும். அந்த வகையில் பெண்கள் பிங்க் பேருந்துகளை ஸ்டாலின் பேருந்து என்று அழைக்கிறார்கள். இதுதான் திராவிட மாடல அரசின் வெற்றி. தமிழ்நாட்டில் பெண்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் புதுமைப்பெண் திட்டம் போல, ஆண்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி கல்விக்காக திமுக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ”மத்திய அரசு தமிழ்நாட்டிற்கான நிதிகளை சரியாக வழங்காமல் வஞ்சித்து வருகிறது. இது குறித்து மத்திய அரசை கேள்வி எழுப்பினால், அதிமுக பதிலளிக்கிறது. மத்தியில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராகக் கூடாது என எங்களால் சொல்ல முடியும். அதுபோல் சொல்லும் திராணி அதிமுகவிற்கு இருக்கிறதா?. தமிழ்நாட்டில் திமுக கூட்டணிக்கு அளிக்கும் ஓட்டு, பிரதமர் மோடி தலையில் வைக்கும் வேட்டு” என்று அவர் கூறினார்

இதையும் வாசிக்கலாமே...    

காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அதிர்ச்சி... ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த வருமான வரித்துறை நோட்டீஸ்!

அதிர்ச்சி... மாமியாரை தரதரவென இழுத்துச் சென்று குப்பைக் கிடங்கில் போட்ட மருமகள்!

பகீர்... ஒரே இடத்தில் 60 பசுக்கள் கொலை...10,000 கிலோ இறைச்சி பறிமுதல்!

கோயிலுக்கும், மசூதிக்கும் ஒரே பெயர் பலகை; கெத்து காட்டும் குடியிருப்புவாசிகள்!

திட்டமிட்டு கொல்லப்பட்டாரா முக்தார் அன்சாரி; மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in