நள்ளிரவில் கோரிக்கை... விடிவதற்குள் நிறைவேற்றம்... மின்னல் வேகத்தில் அமைச்சர் உதயநிதி!

மாணவர்களுடன் அமைச்சர் உதயநிதி
மாணவர்களுடன் அமைச்சர் உதயநிதி

நள்ளிரவில் சந்தித்தபோது  விளையாட்டுப் பொருட்கள் வேண்டும் என்று கேட்ட  விடுதி மாணவர்களின் விருப்பத்தை அதிகாலையிலேயே நிறைவேற்றி வைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மாணவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள்
மாணவர்களுக்கான விளையாட்டுப் பொருட்கள்

தமிழ்நாடு முழுவதும் தனது சுற்றுப் பயணத்தின்போது அதிரடியாக அரசு அலுவலகங்களுக்கு திடீர் விசிட் அடித்து, அங்குள்ள அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டு வருகிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். அப்படி சேலம் பயணத்தில் தரமான சம்பவம் ஒன்றை  செய்து மாணவர்களின் இதயத்தில் இடம் பிடித்திருக்கிறார். 

சேலம் அரசு கலைக்கல்லூரி ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான விடுதிக்கு இரவு  திடீரென்று விசிட் அடித்தார் உதயநிதி. அவர் விடுதிக்குச் சென்றபோது மாணவர்கள் அனைவரும் விடுதியின் கதவுகளை அடைத்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்தனர்.

மாணவர்களுடன் உதயநிதி
மாணவர்களுடன் உதயநிதி

அவர்களைக் கதவைத் திறக்கச் சொல்லி உள்ளே சென்ற அமைச்சர், மாணவர்களிடம் இன்று இரவு என்ன சாப்பிட்டீர்கள்? மாலை என்ன உணவு கொடுத்தார்கள்? காலையில் வழங்கப்பட்ட உணவு வகை என்ன?' என்று அடுக்கடுக்காக கேள்விகளைக் கேட்டார். அவர்கள் சொல்லும் பதில், அரசு வழங்கி உள்ள மெனுவின்படி சரியாக உள்ளதா? எனச் சோதித்தார்.

அதன் பின்னர் உங்களின் குறை என்ன என்று கேட்டார். தங்களுக்கு விளையாடுவதற்குத் தேவையான உபகரணங்களே இல்லை என்று மாணவர்கள் சொன்னார்கள். அதைக் கேட்ட விளையாட்டு அமைச்சர், தனது துறை சார்ந்த கோரிக்கை என்பதால் தாமதிக்கவே கூடாது. உடனே நிறைவேற்றித் தருகிறேன் என்று நள்ளிரவில் வாக்குறுதி அளித்துவிட்டு வந்தார்.

விடிந்ததும் காலையில் விடுதி முன்பாக  அவர்கள் கேட்ட அனைத்து உபகரணங்களும் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்த மாணவர்கள் ஆடிப் போனார்கள். பேட், பந்து, ஸ்டெம்ப், ஃபுட் பால், வாலிபால், டென்னிஸ் பேட், கேரம் போர்டு என அனைத்தையும் வாங்கித் தந்துள்ளார். அவ்வளவு மின்னல் வேகத்தில் நடந்துள்ளது என்கிறார்கள் மாணவர்கள். 

தங்களின் கோரிக்கைகளை மின்னல் வேகத்தில் நிறைவேற்றித் தந்த விளையாட்டுத்துறை அமைச்சருக்கு தங்கள் மனமார்ந்த நன்றிகளை மாணவர்கள் தெரிவித்தனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி… தடம் புரண்ட விரைவு ரயில்... 6 பேர் பலி... பலர் காயம்!

ரூ. 3.48 கோடியை குப்பையில் கொட்டிய தமிழக அரசு; மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 1,00,000 சிம்கார்டுகள் வீணடிப்பு!

HBD SNEHA : ‘புன்னகை இளவரசி’ நடிகை சிநேகா பிறந்தநாள்!

போலி சான்றிதழ்... 24 வருடமாக வேலை செய்த அரசு பள்ளி ஆசிரியை!

அதிர்ச்சி... நள்ளிரவில் வெடித்து சிதறிய செல்போன் சார்ஜர்; பற்றி எரிந்த வீடு... 3 பேருக்கு தீவிர சிகிச்சை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in