சந்திப்பின்போது பிரதமர் மோடிக்கு திருவள்ளுவர் சிலையை பரிசளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

பிரதமர் மோடி- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
பிரதமர் மோடி- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்பிரதமர் மோடி, மத்திய அமைச்சரை சந்தித்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
Updated on
1 min read

பிரதமர் மோடி மற்றும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முன்னாள் ஆளுநரும் தற்போதைய பஞ்சாப் ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் பேத்தி பூஜா-சிவம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து, மதியம் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஸ்ரீகிரிராஜ் சிங்கை சந்தித்து பேசினார்.

பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு

அப்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பஞ்சாயத்து ராஜ் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக விவரித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளுவர் சிலையை பரிசளித்தார். இதையடுத்து, மாலை 4.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பிரதமருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளுவர் சிலையை பரிசளித்தார். அமைச்சரான பிறகு உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திப்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in