சில்லறை கட்சிகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது... பாஜகவை கலாய்த்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!

அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

தமிழ்நாட்டில் திமுக அதிமுகவுக்கு இடையேதான் போட்டி எனவும், சில்லறை கட்சிகளின் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது எனவும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா விமர்சித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் மற்றும் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் பேசும்போது, ”கோவை மக்களவைத் தொகுதி அட்டகாசமாக இருக்கிறது. எதிரணியினர் அனைவரும் டெபாசிட் இழக்கும் அளவுக்கு மிகப்பெரிய வெற்றி அளிக்க அற்புதமான முறையில் கூட்டணி கட்சியினர் களப்பணியாற்றி வருகின்றனர்” என்றார்.

கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்
கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார்

திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து அண்ணாமலை விமர்சித்துள்ளது குறித்த கேள்விக்கு,”எதிரில் அதிமுக என்ற இயக்கம் இருக்கிறது. அதைப் பாருங்கள். அதிமுக என்ற பிரதான கட்சி என்ன சொல்கிறது என்பதற்கு மட்டும் பதில் சொல்லலாம். சில்லரைக் கட்சிகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது. தேர்தலுக்காக 95 லட்சம் ரூபாய் செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இயக்கத்தில் கட்சி தொண்டர்கள் இருந்தால் அவர்களுக்கு செலவு செய்ய வேண்டும். அதனால் எங்களுக்கு செலவாகிறது. பாஜகவிற்கு எதுவும் இல்லாததால் அண்ணாமலை ஒரு பைசா கூட செலவு இல்லை என நினைக்கிறார். எங்களுடைய பிரதான எதிரி அதிமுக, களத்தில் இருக்கிறது. அதில் நாங்கள் கவனம் செலுத்தி வெற்றி பெற வேண்டும் என ஓடிக் கொண்டிருக்கிறோம். சுற்றி இருப்பவர்களை பார்த்தால் கவனச் சிதறலாகும். களத்தில் இருக்கும் எதிரியை வீழ்த்தி கோவையை திமுக கைப்பற்றும்” என்றார்.

கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்
கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்

முன்னதாக கூட்டத்தில் பேசிய கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், ”தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் எப்படி தென் மாநிலங்களில் மட்டும் கடுமையான குடிநீர் பஞ்சம் உருவாகிறது. அண்ணாமலை கோவையில் 2 டிகிரி வெயில் அதிகரித்துள்ளது என பேசுகிறார். 3 டிகிரி வெப்பநிலை அதிகரித்ததற்கு திராவிட கட்சிகள் காரணம் என்று சொல்கிறார்கள். இதை சொல்பவர்களை பார்க்கும்போது புத்தி சுவாதீனமற்றவர்கள் என்று எண்ணத் தோன்றும்.

திராவிட கட்சிகளால் வெப்பம் அதிகரித்ததாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதால்தான் இந்த சந்தேகமே எழுகிறது. பார்ப்பதற்கு புத்தி சுவாதீனமற்றவர் போல பேசுவார்கள். ஆனால் அது உண்மை அல்ல. தங்கள் மீது எந்த குற்றமும் வந்து விடக்கூடாது என்று தப்பிப்பதற்காக இப்படி பேசுகிறார்கள். இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING : அஞ்சல் வழிக் கல்வி படிக்கலாமா, கூடாதா? பல்கலைக்கழக மானிய குழு விளக்கம்!

50க்கும் மேற்பட்ட கார்களில் திரண்ட நாம் தமிழர் கட்சியினர்... தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம்!

அம்பேத்கரை எப்படி மறந்தார் திருமா?! அதிருப்தியில் தொண்டர்கள்!

அதிகபட்ச வாக்குப்பதிவு... டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் கூட்டணி அமோக வெற்றி!

நிலைமை மாறிடுச்சு... கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள்... பகீர் கிளப்பிய முதல்வர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in