திண்டுக்கல் மாநகராட்சி ஆணையருக்கு அமைச்சர் மிரட்டல்: பாஜக கவுன்சிலர் குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையருக்கு அமைச்சர் மிரட்டல்: பாஜக கவுன்சிலர் குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையருக்கு அமைச்சர் மிரட்டல் விடுவதாக பாஜக கவுன்சிலர் தனபால் பகிரங்க குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாநகராட்சி பஸ் ஸ்டான்ட் வளாகத்தில் 32 கடைகள் புதியதாக கட்டப்பட்டுள்ளன. இக்கடைகளை கடந்தாண்டு ஏலமிட்டபோது நடந்த முறைகேடுகள் குறித்து திண்டுக்கல் கிழக்கு மாவட்ட பாஜக தலைவரும், மாநகராட்சி கவுன்சிலருமான தனபால் ஆணையரிடம் முறையிட்டார்.

இதையடுத்து 2022 நவ.17-ல் கடை ஏலம் ரத்து செய்யப்பட்டது. தற்போது இக்கடைகள் மறு ஏலமிடப்பட்டதாக கூறி திறக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வெள்ளை அறிக்கை வெளியிடக்கோரி கவுன்சிலர் தனபால், பஸ் ஸ்டான்ட் வளாகத்தில் இன்று காலை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அனுமதியின்றி போராட்டத்திற்கு முயன்றதாக கூறி போலீஸார் அவரை கைது செய்தனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் தனபால் கூறுகையில், ``பஸ் ஸ்டான்ட் கடைகள் ஏலமிட்டதில் முறைகேடு குறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தினேன். இரண்டு மாதங்களில் 3 முறை மறு ஏலமிட்டு கடைகள் ஒப்படைக்கப்பட்டதாக கூறிய ஆணையர் கடைகள் மறு ஏலமிட்டதாக கையெழுத்திடக்கோரி அமைச்சர் பெரியசாமி மிரட்டுகிறார் என்கிறார்.

மாநகராட்சி நிர்வாகத்தை பொறுத்தவரை அமைச்சர் தான் நிர்வாகம் செய்கிறார். இன்னும் இரண்டு மாதத்தில் ஓய்வு பெறவுள்ள நான் என்னை காப்பாற்றிக்கொள்ள கையெழுத்திட்டதாக ஆணையர் கூறுகிறார். முறைகேடு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடும் வரை எனது போராட்டம் தொடரும்'' என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in