ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டு வராதது ஏன்?- அமைச்சர் ரகுபதி விளக்கம்!

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் கொண்டு வராதது ஏன்?- அமைச்சர் ரகுபதி விளக்கம்!

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் எனத் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் ரம்மி குறித்து வல்லுநர்களின் அறிக்கையைப் பெற்ற தமிழக அரசு ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்றத் தயங்குவதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டிவந்தன. இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத் துறை அமைச்சர் ரகுபதி,  "ஆன்லைன் ரம்மி தடை குறித்து இரண்டு முறை கூட்டங்கள் கூட்டப்பட்டுள்ளன. இந்தியாவுக்கே இந்த சட்டம் முன்மாதிரியாக அமைய வேண்டும் என்பதும், எந்த நீதிமன்றத்தாலும், இந்த சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்ற வகையிலும் அந்த சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என முதல்வர் விரும்புகிறார். அவரின் அறிவுறுத்தல் காரணமாக அதற்கேற்ற வகையில் விரைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். மிக விரைவில், ஆன்லைன் ரம்மி அவசரச் சட்டம் கொண்டு வரப்படும். பின்னர் சட்டமன்றக் கூட்டத்தொடரில் அந்த சட்டம் நிறைவேற்றப்படும்.

நீட் தேர்வு விலக்கு மசோதா பொறுத்தவரையில் ஆளுநரிடமிருந்து மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கிருந்து சில விளக்கங்கள் கேட்கப்பட்டன. அதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சட்டத்துறை மூலம் பதில்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக வேந்தர்களாக யாரை நியமிக்க வேண்டும் என்பதை அரசின் முடிவுக்கு விட வேண்டும் என்ற சட்டமுன்வடிவுகளும் ஆளுநரின் பரிசீலனையில் இருக்கிறது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in