இயக்குநர் விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா தனியார் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் படுத்த படுக்கையாக உள்ளார். இந்த நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 15 சிறப்பு மருத்துவர்களுடன் விக்ரமn வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்து சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார்.
இயக்குநர் விக்ரமனின் மனைவி ஜெயப்பிரியா தனியார் மருத்துவமனையின் தவறான அறுவை சிகிச்சை காரணமாக கடந்த ஐந்து வருடங்களாக கால்களைகூட அசைக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கிறார். மேலும், இவரை கவனித்துக் கொள்ளவே விக்ரமன் படங்கள் இயக்குவதை நிறுத்தி விட்டதாகவும், சொத்துக்களை விற்றுதான் மருத்துவச் செலவை பார்ப்பதாகவும் ஜெயப்பிரியா தெரிவித்திருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. தவறான சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்ட ஜெயப்பிரியாவுக்கு உதவ வேண்டுமென சமூக வலைதளங்களில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், இயக்குநர் விக்ரமனின் மனைவியை மருத்துவக் குழுவுடன் நேரில் சென்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நலம் விசாரித்தார். அப்போது, ஜெயப்பிரியாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் மற்றும் அவரை எழுந்து நடக்கவைப்பதற்கான மேல் சிகிச்சைகள் அளிப்பது குறித்து ஆய்வு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஜெயப்பிரியாவின் சிகிச்சைக்கு தமிழக அரசு உதவும் என அமைச்சர் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
என் சாவுக்கு எம்எல்ஏ தான் காரணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த வாலிபர்!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.... வானிலை மையம் அறிவிப்பு
நாளை கடைசி தேதி.... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
அப்பாடா.... குறைந்தது தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் ஆறுதல்!
சோகம்... ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு....18 ரயில்கள் ரத்து