கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா திடீர் சந்திப்பு!

கமல்,அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா
கமல்,அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியாகமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா திடீர் சந்திப்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறவுள்ள புகைப்படக் கண்காட்சியை திறந்து வைக்க வருமாறு கமல்ஹாசனுக்கு அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா ஆகியோர் அழைப்பு விடுத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி வரும் 28ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியை திறந்து வைக்குமாறு மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆழ்வார்பேட்டையில் உள்ள கமல்ஹாசனின் கட்சி அலுவலகத்தில் அவரை சந்தித்த தமிழக அமைச்சர் சேகர் மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் புகைப்பட கண்காட்சிக்கான அழைப்பிதழை நேரில் வழங்கி அழைப்பு விடுத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in