அமலாக்கத்துறை காவலுக்கு செல்வாரா அமைச்சர் செந்தில் பாலாஜி?- இன்று விசாரணை

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவியின் ஆட் கொணர்வு மனு, அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு ஆகியவை குறித்த வழக்குகள் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிப்பது கோரிய வழக்கு மற்றும் செந்தில் பாலாஜியின்  மனைவி மேகலா தொடர்ந்திருந்த  ஆட்கொணர்வு மனு ஆகியவை மீது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரணை நடத்த உள்ளது.

நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வில் பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை நடைபெறும் என  பட்டியல் இடப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் இல்லை என்று மூன்றாவது நீதிபதி தீர்ப்பளித்துள்ள நிலையில் அவரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று அனுமதி கோருகின்றது.  எந்த தேதி முதல் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்கலாம் என இரு நீதிபதிகள் அமர்வு முடிவு செய்யும் என 3-வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பளித்திருந்தார்.

எனவே அது குறித்த விசாரணை இன்று நடக்கவுள்ளது. விசாரணை முடிவில் எந்த தேதியில் இருந்து செந்தில் பாலாஜியை  காவலை எடுத்து விசாரிக்கலாம் என்று நீதிபதிகள் அனுமதி வழங்குவார்கள் எனத் தெரிகிறது. அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  சென்னையில் தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை நடந்து முடிந்த நிலையில் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in