ஹேக் செய்யப்பட்டது அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கு: கிரிப்டோ விளம்பரம் பதிவு!

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர்.

உலகம் முழுவதும் அவ்வப்போது ஹேக்கர்கள் பிரபலங்களின் ட்விட்டர் கணக்கினை ஹேக் செய்து அதிர்ச்சியளிக்கிறார்கள். அந்த வகையில் இன்று காலையில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர்.

செந்தில் பாலாஜியின் ட்விட்டர் கணக்கின் பெயர் இன்று காலையில் திடீரென வேரியோரியஸ் என்ற மாறியது. மேலும், ஒரு கிரிப்டோ கரன்சி தொடர்பான விளம்பரமும் அவரது ட்வீட்டரில் பதிவு செய்யப்பட்டது. அதில், “ எனவே நாங்கள் கிரிப்டோ பணப்பைகளை உருவாக்கினோம். அனைத்து பணமும் ஹெல்பிண்டியா நிறுவனத்துக்கு அனுப்பப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான லிங்க்-கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது ஃபாலோவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக ட்விட்டரில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. அவரது கணக்கை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in