கோவையில் ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த தயாராகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி!

கோவையில் ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த தயாராகிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி!

கோவையில் விரைவில் ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்த இருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார்.

கோவையில் இன்று செய்தியாளரிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, "மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் 2.67 கோடி பேர் இணைக்க உள்ள நிலையில் 2 கோடி பேர் ஆதாரை இணைத்துள்ளனர். பத்திரிகைகளில் வரும் செய்திகளின் அடிப்படையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் எந்தவித தோய்வும் இல்லை, எந்த விதமான குளறுபடியும் இல்லை. மிகவும் சிறப்பாக நேர்த்தியாக நடந்து கொண்டிருக்கிறது. யாருக்கும் மின்சாரத் துறையில் இருந்து மெசேஜ் வருவது தொடர்பான குறைபாடு இல்லை" என்றார்.

மேலும், "கோயம்புத்தூரில் விரைவில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கி இருக்கிறோம். விரைவில் கோவை மாவட்டத்தில் மிகவும் சிறப்பாக முதல்வரின் நல்லாசியோடு ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்தப்பட இருக்கிறது" என்றார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in