8வது முறையாக காவல் நீட்டிப்பு... அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அக்.20 வரை நீதிமன்றக் காவல்!

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 20-ம் தேதி வரை நீட்டித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கடந்த ஜூன் 14-ல் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.  அவருக்கு எதிரான இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி  3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப். பத்திரிக்கையை, அமலாக்கத் துறையினர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லிங்கேஸ்வரன் முன்பு புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தபட்டார். இதையடுத்து அவரது நீதிமன்ற காவலை அக்டோபர் 20-ம் தேதி வரை  நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 8வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு வரும் திங்கட்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.


இதையும் வாசிக்கலாமே...

ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு! மாணவர்கள் உற்சாகம்!

திருப்பதியில் பேத்தியுடன், துர்கா ஸ்டாலின் தரிசனம்!

கடும் போக்குவரத்து நெரிசல்... படப்பிடிப்புக்கு மெட்ரோவில் பயணித்த பிரபல நடிகர்!

அதிர்ச்சி... தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு சரமாரி வெட்டு!

நான் ஹெல்மெட் திருடவில்லை; உயிரை மாய்த்துக்கொள்வேன்... சிறப்பு எஸ்ஐ கதறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in