திமுகவுக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை... அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை!

தயாநிதி மாறன் வேட்புமனு
தயாநிதி மாறன் வேட்புமனு

நோட்டாவுடன் போட்டியிடக்கூடிய பாஜக வேட்பாளர்கள் திமுக வேட்பாளர்களின் பணியைப் பற்றி பேசக்கூடாது என தமிழக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை செனாய் நகரில் உள்ள மாநகராட்சி வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தயாநிதி மாறன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது வேட்பாளர் தயாநிதி மாறனுடன் அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர்கள் மோகன், வெற்றியழகன், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் சிற்றரசு உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன்,” கடந்த 5 ஆண்டுகளில் சிறப்பாக மக்கள் பணி ஆற்றினோம். மக்கள் மீண்டும் வாய்ப்பு கொடுப்பார்கள் என நம்புகிறேன்” என கூறினார்.

அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பு
அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர் சந்திப்பு

இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு,”நோட்டாவுடன் போட்டியிடக்கூடிய பாஜக வேட்பாளர்கள் திமுக வேட்பாளர்களின் பணியை பேசக்கூடாது. தயாநிதி மாறன் மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து மக்கள் பணியாற்றியுள்ளார். திமுகவிற்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை. உழைப்பாளர்கள் பாட்டாளிகள் சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி களத்தில் நிற்கும் ஒரே இயக்கம் திமுக. தமிழகத்தில் போட்டி இந்தியா கூட்டணியுடன் அல்ல. இந்தியா கூட்டணிக்கு அடுத்து யார் வரப் போகிறார்கள் என்பதுதான் தற்போது போட்டி” என தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்றே கடைசி... இதுவரை 751 பேர் வேட்புமனு தாக்கல்: சுயேட்சை வேட்பாளர்கள் அதிக ஆர்வம்!

தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!

பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு குற்றவாளிகள் தமிழகத்தில் பதுங்கலா?... 5 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை!

வெயிலுக்கு இதம் தரும் ஜில் தகவல்... தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 2.80 லட்சம் மாணவர்கள் சேர்ப்பு... எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in